4 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்


4 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது.

விழுப்புரம்

மயிலம்:

மயிலம் அருகே உள்ள எடையப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி(வயது 65). இவரது கூரை வீட்டில் நேற்று யாரும் இல்லாதபோது மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் பக்கத்தில் உள்ள ரவீந்திரன், பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோரது கூரை வீடுகளுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 4 வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.


Next Story