ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் வேலூர் மாவட்டத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு


ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் வேலூர் மாவட்டத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு
x
வேலூர்

வேலூர் ஆசிரியர் இல்லத்தில் ஜாக்டோ -ஜியோ ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் செ.நா. ஜனார்த்தனன், சேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயசீலன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க செயலாளர் பாபு வரவேற்றார். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் செ.நா. ஜனார்த்தனன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை தீவு திடலில் வருகிற 10-ந் தேதி ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்வுரிமை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். வேலூர் மாவட்டம் சார்பில் 4 ஆயிரம் பேர் கலந்து கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.


Next Story