4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

4¾ டன் ரேஷன் அரிசி பறிமுதல்-2 பேரையும் கைது செய்தனர்

தென்காசி

தென்காசி மாவட்ட குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சுரண்டை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது சிவகுருநாதபுரத்தில் பழனிசாமி என்பவர் வீடு பகுதியில் ஆய்வு செய்த போது, அங்கு 95 மூட்டைகளில் 4¾ டன் ரேஷன் அரிசி மற்றும் 160 கிலோ ரேஷன் துவரம் பருப்பு, 17 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் ஆகியவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசி, துவரம் பருப்பு, மண்எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய 1 லாரி, 2 மொபட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுருநாதபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது 74) மற்றும் தங்கபாண்டி (55) ஆகிய2 பேரையும் கைது செய்தனர்.


Next Story