4 மரங்களை வேருடன் பிடுங்கி மறுநடவு


4 மரங்களை வேருடன் பிடுங்கி மறுநடவு
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகராட்சி அதிகாரிகள் தன்னார்வ அமைப்புடன் இணைந்து நேற்று 4 மரங்களை வேருடன் பிடுங்கி அதே பகுதியில் வேறு இடத்தில் மறுநடவு செய்தனர்.

கோயம்புத்தூர்


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதி ரூ.40 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இங்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் அருகே 43 அடி உயர கோபுரம் அமைப்பதற்காக ஒரு மரம் வேருடன் பிடுங்கப்பட்டு வேறு இடத்தில் மறுநடவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் பகுதியில் மீடியா ட்ரீ அமைக்கப் பட்டு உள்ளது. அங்கு வாகனங்கள் சுற்றி செல்ல ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது.

இதில் போக்குவரத்துக்கு இடையூறாக 4 மரங்கள் இருந்தன. அவற்றை அகற்றினால் மட்டுமே வாகனங்கள் செல்ல முடியும் என்ற நிலை இருந்தது.

இதையடுத்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் தன்னார்வ அமைப்புடன் இணைந்து நேற்று 4 மரங்களை வேருடன் பிடுங்கி அதே பகுதியில் வேறு இடத்தில் மறுநடவு செய்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுமக்களை கவரும் வகையில் அலங்கார விளக்குகள், எல்.இ.டி. டிஸ்பிளே உடன் மீடியா ட்ரீ அமைக்கப்படுகிறது. அதை சுற்றி வாகனங்கள் செல்ல ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கிருந்த 4 மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் மறுநடவு செய்து உள்ளோம் என்றனர்.


Next Story