வாயில் கருப்புத்துணி கட்டி 4 பெண்கள் போராட்டம்


வாயில் கருப்புத்துணி கட்டி 4 பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2023 12:15 AM IST (Updated: 27 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் வாயில் கருப்புத்துணி கட்டி 4 பெண்கள் போராட்டம் நடத்தினா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

மேல்மலையனூர் தாலுகா ஆத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் குபேந்திரன் மனைவி ஜீவா (வயது 43), ராஜாமணி மனைவி கிருஷ்ணவேணி (68), இவருடைய மகள் வசந்தி (50), ரகுநாதன் மகள் தனலட்சுமி (35) ஆகியோர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். இவர்கள் 4 பேரும் அங்குள்ள நுழைவுவாயில் முன்பு, தாங்கள் கொண்டு வந்திருந்த கருப்பு துணியை எடுத்து தங்கள் வாயில் கட்டிக்கொண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்தோம். ஆனால் எங்களுடைய பெயரை அதற்கான பதிவேட்டில் பதிவு செய்யவில்லை. இதுபற்றி நாங்கள், மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட சென்றோம். அப்போது ஊராட்சி தலைவரின் உறவினர்கள், எங்களை திட்டி தாக்கினர். அதன் பிறகு நாங்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சென்று முறையிட்டோம். அவர் முன்னிலையிலும் எங்களை தாக்கினர். எனவே எங்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினர். அதன் பிறகு அவர்கள், மாவட்ட கலெக்டரிடம், இதுபற்றி புகார் மனு அளித்துவிட்டு சென்றனர்.


Next Story