4 ஆண்டு கரும்பு நிலுவைத்தொகை ரூ.25 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


4 ஆண்டு கரும்பு நிலுவைத்தொகை ரூ.25 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 31 Jan 2023 12:30 AM IST (Updated: 31 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

4 ஆண்டு கரும்பு நிலுவைத்தொகை ரூ.25 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

விழுப்புரம்

முண்டியம்பாக்கம் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பேரவைக்கூட்டம் நேற்று மாலை விழுப்புரம் கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் வக்கீல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில், கரும்புக்கான வெட்டுக்கூலி முழுவதையும் ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும், நடப்பு கரும்பு பருவம் 2022-23-ம் ஆண்டிற்கான கரும்பு கிரையத்தொகையை 15 நாட்களில் விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும், கரும்பு பிழித்திறனை காரணம் காட்டாமல் மத்திய அரசு அறிவிக்கும் விலையை, நடப்பு கரும்பு பருவம் 2022-23-ம் ஆண்டிற்கு வழங்க வேண்டும், 4 ஆண்டு கரும்பு நிலுவைத்தொகை ரூ.25 கோடியை உடனடியாக வழங்க வேண்டும், விவசாயிகள் விரும்பும் ரக கரும்புகளை நடவு செய்ய ஆலை நிர்வாகம் அனுமதிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் மத்திய அரசின் கரும்பு இன்சூரன்ஸ் தொகையை விரைவில் பெற்றுத்தர வேண்டும், கரும்பு விவசாயிகள், விதை கரணைகள் வாங்கியதற்கான கடன் தொகைக்கு வட்டியை கணக்கிட்டு பிடித்தம் செய்யக்கூடாது, விவசாயிகளுக்கு தனியார் காப்பீடு கம்பெனியை ஆலை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும், ஆண்டுதோறும் கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு, கரும்பு பயிர் செய்து ஆலையில் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டும் காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story