ரூ.1½ லட்சம் பறித்து சென்ற 2 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை


ரூ.1½ லட்சம் பறித்து சென்ற 2 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே டாஸ்மாக் மேலாளரை தாக்கி ரூ.1½ லட்சத்தை பறித்து சென்ற 2 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர்


குடவாசல் அருகே டாஸ்மாக் மேலாளரை தாக்கி ரூ.1½ லட்சத்தை பறித்து சென்ற 2 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ரூ.1½ லட்சம் பறிப்பு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பிலாவடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் மேலாளரை கடந்த 2015-ம் ஆண்டு தாக்கி அவரிடமிருந்து, ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 284 மற்றும் அவருடைய இருசக்கர வாகனத்தை 4 பேர் கொண்ட கும்பல் பறித்துச் சென்றது.

இதுகுறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு, சாக்கோட்டை கன்னிகோவில் தெருவைச் சேர்ந்த ராமு மகன்களான விமல் (வயது 22), விக்னேஷ் (23), கும்பகோணம், குப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் கதிரேசன் (36), முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சதீஷ் (25) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

4 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருந்த போதே விமல் மற்றும் கதிரேசன் ஆகியோர் இறந்து விட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில் விக்னேஷ், சதீஷ் ஆகிய 2 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.


Next Story