முதியவரை தாக்கிய வாலிபருக்கு 4 ஆண்டு சிறை
வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் அருகே உள்ள கூரைக்கூண்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (29). அந்த பகுதியில் தண்ணீர் பிடிக்கும் போது இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுரேஷ் அருகே கிடந்த கம்பை எடுத்து செல்வராஜை தாக்கியுள்ளார். இதில் செல்வராஜ் படுகாயம் அடைந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற (பொறுப்பு) நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து சுரேசுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story