40 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்


40 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
x

40 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு சிவகாசி அருகே ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று அதிகாலை கிருஷ்ணம நாயக்கன்பட்டி கிராமத்தில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வேனை சோதனையிட்டதில் தலா 30 கிலோ கொண்ட 40 மூடை ரேஷன் அரிசி இருந்தது. வேனில் யாரும் இல்லை. போலீசார் 40 மூடை ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Next Story