40 டன் முருங்கைக்காய் வரத்து


40 டன் முருங்கைக்காய் வரத்து
x
திருப்பூர்

40 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

 நேற்று 60 விவசாயிகள் 40 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.20 முதல் ரூ.25 வரைக்கும், மரம் முருங்கை ரூ.15 முதல் ரூ.20 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.30 முதல் ரூ. 35 வரைக்கும் கொள்முதல் செய்தனர். தற்போது தென் மாவட்டங்களில் இருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்குஅதிக வரத்து இருப்பதால் விலை குறைந்துள்ளது. நேற்று கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.


Next Story