40 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
40 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தலின்படி கீழக்கரையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் மற்றும் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர், கடலோர அமலாக்க பிரிவு சார்பு ஆய்வாளர் சித்தன், மீன்வளத்துறை மேற்பார்வையாளர் ராஜ்குமார் ஆகியோர் கீழக்கரை மீன் மார்க்கெட், சீதக்காதி சாலையில் உள்ள ஓட்டல், பேக்கரி, டீக்கடை, மளிகை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கெட்டுப்போன மீன்கள் சுமார் 40 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பள்ளி அருகில் உள்ள கடைகளில் சோதனை செய்ததில் சிகரெட், பீடி, புகையிலை போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து மொத்தம் ரூ.11 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, மேற்பார்வையாளர் சக்தி, பாலா உள்பட நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.