40 லட்சம் இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டது


40 லட்சம் இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டது
x

40 லட்சம் இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டது

ராமநாதபுரம்

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர் பட்டினத்தில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் மீனவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக அவ்வப்போது மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் கருத்துகளால் கடல் பகுதியில் நேற்று மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இறால் மீன் குஞ்சுகள் விடப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மண்டபத்தில் இருந்து 40 லட்சம் இறால் மீன் குஞ்சுகள் தண்ணீர் நிரப்பப்பட்ட கேன்களில் வாகனம் ஒன்றில் ஏற்றி பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து மீன்பிடிப்படகு ஒன்றில் ஏற்றி நடுக்கடல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு 30-க்கும் மேற்பட்ட கேன்களில் இருந்த 40 லட்சம் இறால் மீன் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. மத்திய கடல் மீன ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மண்டபம் மீன்துறை உதவி இயக்குனர் அப்துல்காதர் ஜெய்லானி, மீன்துறை மேற்பார்வையாளர் சங்கர் மற்றும் மூத்த விஞ்ஞானி ஜான்சன் உள்ளிட்ட ஏராளமான மீனவர்களும் கலந்து கொண்டனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நேற்று வரை சுமார் 4 கோடி இறால் மீன்குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளதாகவும் மத்திய கடன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story