மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 403 மனுக்கள் பெறப்பட்டன


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 403 மனுக்கள் பெறப்பட்டன
x

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 403 மனுக்கள் பெறப்பட்டன.

புதுக்கோட்டை

அடிப்படை வசதி

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். புதுக்கோட்டையில் நரிமேடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் குடியிருக்கும் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், தங்கள் பகுதியில் தண்ணீர் வசதி, குப்பை தொட்டி வசதி, போக்குவரத்து வசதி உள்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என மனு அளித்தனர். இதேபோல ஆலங்குடி பகுதியை சேர்ந்த மாரிக்கண்ணு என்பவர் தனக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டாவில் குறிப்பிட்டுள்ள இடத்தினை அளந்து தர வேண்டும் என மனு அளித்தார். பனம்பட்டி பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டத்தை தள்ளி வைக்க கோரி மக்கள் விடுதலை கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

403 மனுக்கள்

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மொத்தம் 403 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.52,210 மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கவிதாராமு வழங்கினார். கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story