மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு ரூ.404 கோடியில் ஒப்பந்தம்


மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு ரூ.404 கோடியில் ஒப்பந்தம்
x

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 2-ம் கட்டத்தில் 3-வது வழித்தடத்தில் சோழிங்கநல்லூரில் இருந்து சிப்காட் வரை 9.38 கிலோ மீட்டர் நீளத்திற்கு 9 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் வழித்தடம் அமைக்கப்படுகிறது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 2-ம் கட்டத்தில் 3-வது வழித்தடத்தில் சோழிங்கநல்லூரில் இருந்து சிப்காட் வரை 9.38 கிலோ மீட்டர் நீளத்திற்கு 9 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் வழித்தடம் அமைக்கப்படுகிறது. அதேபோல், 5-வது வழித்தடத்தில் கோயம்பேடு பஸ் முனையத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 29.05 கிலோ மீட்டர் நீளத்திற்கு 28 உயர்த்தப்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

இதற்கான அனைத்து வகை பணிகளுக்கும் ரூ.404.45 கோடி மதிப்பில் லின்க்சன் இந்தியா நிறுவனத்திற்கு ஒப்பந்தமானது. இதற்கான ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும் இயக்கம்) மற்றும் விற்பனை இயக்குனர் யாசிர் ஹமீத் ஷா ஆகியோர் கையெழுத்திட்டனர். அப்போது, கூடுதல் பொது மேலாளர் எஸ்.சீனி வாசன், ஒப்பந்த நிறுவனத்தின் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story