கள்ளக்குறிச்சி மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 407 மனுக்கள் பெறப்பட்டன


கள்ளக்குறிச்சி மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 407 மனுக்கள் பெறப்பட்டன
x

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 407 மனுக்கள் பெறப்பட்டன.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 372 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக அமைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 35 மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்களை பெற்ற அவர், அவற்றை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் தமிழ்நாடு தூய்மை பணி புரிவோர்களுக்கு நல வாரிய அட்டையையும் வழங்கினார்.கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஷெர்லிஏஞ்சலா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story