கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 4,111 பேர் எழுதினர் 5-ம் வகுப்பு கல்வி தகுதிக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகள் பங்கேற்பு


கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 4,111 பேர் எழுதினர்  5-ம் வகுப்பு கல்வி தகுதிக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகள் பங்கேற்பு
x

ேலூர் மாவட்டத்தில் 6 மையங்களில் நடந்த கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 4,111 பேர் எழுதினார்கள். 1,651 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. ம் வகுப்பு கல்வி தகுதிக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகளும் பங்கேற்றனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 6 மையங்களில் நடந்த கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 4,111 பேர் எழுதினார்கள். 1,651 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. ம் வகுப்பு கல்வி தகுதிக்கு என்ஜினீயரிங் பட்டதாரிகளும் பங்கேற்றனர்.

கிராம உதவியாளர் பணி

தமிழகத்தில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 40 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பங்கள் தாசில்தார்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு அதில், ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் எழுத்துத்தேர்வு நேற்று நடைபெற்றது.

4,111 தேர்வு எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வு எழுத 5,762 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, ஸ்பார்க் மெட்ரிக்குலேசன் பள்ளி, காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகம், குடியாத்தம் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கே.வி.குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிக்குலேசன் பள்ளி, பேரணாம்பட்டு இசுலாமிய மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வேலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை 4,111 பேர் எழுதினார்கள். 1,651 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தேர்வு காலை 10 முதல் 11 மணி வரை நடைபெற்றது. தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னர் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், எலக்ட்ரானிக் கைக்கெடிகாரம், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தேர்வு மையங்களை அந்தந்த தாசில்தார்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு அறை மற்றும் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். தேர்வு மையங்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

என்ஜினீயரிங் பட்டதாரிகள்

இந்த கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு அடிப்படை கல்வித் தகுதி 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால் என்ஜினீயரிங், மற்றும் முதுகலை, இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதியதை காண முடிந்தது.

பேரணாம்பட்டு பகுதியில் நடந்த தேர்வை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலரும், துணை கலெக்டருமான கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார். பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன், மண்டல துணை தாசில்தார்கள் பலராமன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story