42 பேர் நத்தம் கோர்ட்டில் ஆஜர்
நத்தம் அருகே வீரமுத்தரையர் சிலை வைத்த வழக்கில் நத்தம் கோர்ட்டில் 42 பேர் ஆஜராகினர்.
திண்டுக்கல்
நத்தம் அருகே உள்ள எரம்பட்டியில் கடந்த 2016-ம் ஆண்டு வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில், முத்தரையர் சிலை வைக்கப்பட்டது. இதையடுத்து நத்தம் போலீசார் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக பொக்லைன் எந்திரம் மூலம் அந்த சிலையை அகற்றினர். இதனால் அந்த பகுதியில் பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கே.கே.எஸ் செல்வக்குமார் உள்பட 42 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நத்தம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது கே.கே.எஸ் செல்வக்குமார் உள்பட 42 பேரும் நீதிபதி உதயசூரியா முன்பு ஆஜராகினர். இதைத்தொடர்ந்து விசாரணை நடத்திய நீதிபதி வழக்கை வருகிற 5-ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story