காரில் வைத்திருந்த 42 பவுன் நகைகள் திருட்டு


காரில் வைத்திருந்த 42 பவுன் நகைகள் திருட்டு
x

வளநாடு அருகே சாலையோரத்தில் காரை நிறுத்தி ஓய்வு எடுத்தபோது, அதில் வைத்திருந்த 42 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுவிட்டனர்.

திருச்சி

துவரங்குறிச்சி, செப்.10-

வளநாடு அருகே சாலையோரத்தில் காரை நிறுத்தி ஓய்வு எடுத்தபோது, அதில் வைத்திருந்த 42 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுவிட்டனர்.

மளிகை கடை உரிமையாளர்

சென்னை கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 51). மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து ஒரு காரில் புறப்பட்டு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் கருப்பசாமி கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில் நள்ளிரவில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வளநாட்டை அடுத்த வலசுப்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர்.

42 பவுன் நகைகள் திருட்டு

அப்போது 42 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரத்தை ஒரு பையில் போட்டு காரின் முன் பகுதியில் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் மீண்டும் புறப்பட தயாரானபோது, நகை மற்றும் பணம் வைத்திருந்த பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அப்பகுதியில் தேடியபோது, நகை-பணம் கிடைக்கவில்லை.

சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்த போது, அதனை யாரோ திருடி சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பசாமி வளநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Next Story