5 தொகுதிகளில் 42 ஆயிரத்து 684 வாக்காளர்கள் நீக்கம்


5 தொகுதிகளில் 42 ஆயிரத்து 684 வாக்காளர்கள் நீக்கம்
x

நெல்லை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 5 தொகுதிகளில் 42 ஆயிரத்து 684 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 5 தொகுதிகளில் 42 ஆயிரத்து 684 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகம்மது சபீர் ஆலம், உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், தேர்தல் தாசில்தார் கந்தப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் விஷ்ணு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்று கொண்டனர். நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி காசி மணி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சங்கர், அ.தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் சிந்து முருகன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்க குமார், பகுஜன் சமாஜ் மாநில செயலாளர் தேவேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிதாக 7,722 பேர் சேர்ப்பு

5.1.2022-ன் படி நெல்லை மாவட்டத்தில் 13 லட்சத்து 86 ஆயிரத்து 140 வாக்காளர்கள் இருந்தனர். அதன்பிறகு நெல்லை தொகுதியில் 1,374 பேரும், அம்பையில் 1,241 பேரும், பாளையங்கோட்டையில் 2,059 பேரும், நாங்குநேரியில் 1,779 பேரும், ராதாபுரத்தில் 1,269 பேரும் என புதிதாக மொத்தம் 7,722 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் 42 ஆயிரத்து 684 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டும், 5,283 பேர் திருத்தம் செய்தும், 1,006 பேர் முகவரி மாற்றம் செய்தும் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தம் உள்ள 5 தொகுதிகளிலும் 13 லட்சத்து 51 ஆயிரத்து 178 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 6 லட்சத்து 61 ஆயிரத்து 503 பேரும், பெண்கள் 6 லட்சத்து 89 ஆயிரத்து 557 பேரும், 3-ம் பாலினத்தவர் 118 பேரும் உள்ளனர். மொத்தம் 1,484 வாக்குச்சாவடிகள் உள்ளன.

தொகுதிவாரியாக...

நெல்லை தொகுதி வாக்காளர்களில் ஆண்கள் 1 லட்சத்து 43 ஆயிரத்து 919 பேரும், பெண்கள் 1 லட்சத்து 50 ஆயிரத்து 774 பேரும், 3-ம் பாலினத்தவர் 62 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 755 பேர் உள்ளனர். 309 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

அம்பை தொகுதி வாக்காளர்களில் ஆண்கள் 1 லட்சத்து 18 ஆயிரத்து 854பேரும், பெண்கள் 1 லட்சத்து 26 ஆயிரத்து 203 பேரும், 3-ம் பாலினத்தவர் 7 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரத்து 64 பேர் உள்ளனர். 294 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பாளையங்கோட்டை தொகுதி வாக்காளர்களில் ஆண்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 282 பேரும், பெண்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 127 பேரும், 3-ம் பாலினத்தவர் 23 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 432 பேர் உள்ளனர். 269 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நாங்குநேரி தொகுதி வாக்காளர்களில் ஆண்கள் 1 லட்சத்து 38 ஆயிரத்து 108 பேரும், பெண்கள் 1 லட்சத்து 43 ஆயிரத்து 403 பேரும், 3-ம்பாலினத்தவர் 11 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 522 பேர் உள்ளனர். 306 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராதாபுரம் தொகுதி வாக்காளர்களில் ஆண்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 340 பேரும், பெண்கள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 50 பேரும், 3-ம்பாலினத்தவர் 15 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 405 பேர் உள்ளனர். 306 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் ஆண்களை விட 28 ஆயிரத்து 54 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-

சிறப்பு முகாம்

வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இதனை பார்வையிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றை ஆன்-லைன் மூலமாகவும், நேரடியாகவும் செய்து கொள்ளலாம். இதற்காக இந்த மாதம் வருகிற 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும். நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை 51.76 சதவீதம் பேர் இணைத்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story