420 கிலோ புகையிலை பறிமுதல்


420 கிலோ புகையிலை பறிமுதல்
x

திண்டுக்கல்லில் இருந்து ஈரோட்டுக்கு கடத்த முயன்ற 420 கிலோ புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இருந்து ஈரோட்டுக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராம பாண்டியன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலக சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் வகையில், அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அந்த சரக்கு வாகனத்தில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட மெல்லும் புகையிலை இருந்தது தெரிய வந்தது. மேலும் எரியோடு பகுதியில் இருந்து ஈரோட்டுக்கு புகையிலையை கடத்த முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சரக்கு வாகனத்தில் 18 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட 420 கிலோ புகையிலையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story