கடத்த முயன்ற 420 லிட்டர் மானிய மண்எண்ணெய் பறிமுதல்
கடத்த முயன்ற 420 லிட்டர் மானிய மண்எண்ணெய் பறிமுதல்
கன்னியாகுமரி
கொல்லங்கோடு:
நித்திரவிளை தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் நேற்று இரவு கிராத்தூர் பகுதியில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக கேரளா நோக்கி பயணிகள் ஆட்டோ ஒன்று சந்தேகப்படும்படியாக சென்றது. இதனை கண்ட ஏட்டு ஜோஸ் ஆட்டோவை நிறுத்த சைகை காட்டினார். ஆனால் டிரைவர், ஆட்டோவை நிறுத்தாமல் சென்றுள்ளார். உடனே அவர் ஆட்டோவை சிறிது தூரம் விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனை செய்த போது அதில் 12 பிளாஸ்டிக் கேன்களில் சுமார் 420 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் இருந்தது தெரியவந்தது இதனையடுத்து போலீசார் மண்எண்ணெயுடன் ஆட்டோவை பறிமுதல் செய்தார். மேலும் டிரைவரான வள்ளவிளையை சேர்ந்த சிலுவைபிள்ளை என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story