420 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்


420 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்
x

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் 420 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் பல்வேறு கட்டங்களாக பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 420 பெண்களுக்கு ஒன்றியம் வாரியாக வழங்கப்பட்டது. இதனை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் உமையாள் கண்காணித்தார்.

தங்கம் வாங்க ஏராளமான பெண்கள் குவிந்ததால் கலெக்டர் அலுவலக பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story