மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 422 மனுக்கள் பெறப்பட்டன
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 422 மனுக்கள் பெறப்பட்டன
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 422 பேர் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் கண்டாச்சிபுரம் தாலுகா நல்லாப்பாளையத்தை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவன் நிஷாந்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட காது கேட்கும் கருவி பழுதானதால் படிப்பதற்கு சிரமப்பட்ட அவன், வேறு கருவியை தரும்படி குறைகேட்பு கூட்டத்தில் மனு கொடுத்ததன் அடிப்படையில் அச்சிறுவனுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காது கேட்கும் கருவியை கலெக்டர் மோகன் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குனர் சீனிவாசன், உதவி ஆணையர்(கலால்) சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.