43 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவர் கைது


43 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே 43 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள்களை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, பொள்ளாச்சி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் பொள்ளாச்சியில் இருந்து மீன்கரை செல்லும் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் விற்பனை செய்வதற்காக குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், ஆனைமலையை சேர்ந்த அபுல்கலாம் ஆசாத் (வயது 41) என்பது தெரியவந்தது. பின்ன அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 43 கிலோ குட்கா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.



Next Story