நாகர்கோவிலில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் 444 மனுக்கள் பெறப்பட்டன
நாகர்கோவிலில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் 444 மனுக்கள் பெறப்பட்டன
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். முகாமிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 444 போ் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். கலெக்டர் அரவிந்த் மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, தனித்துறை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருப்பதி உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மனு அளிக்க வந்த அனைவரும், போலீசாரின் தீவிர சோதனைக்கு பிறகே கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
------