45 கிலோவில் காச்சில் கிழங்கு


45 கிலோவில் காச்சில் கிழங்கு

கன்னியாகுமரி

அருமனை:

அருமனை அருகே உள்ள மாலைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரதீஸ். இவர் தனது நிலத்தில் பலவிதமான கிழங்கு வகைகளை பயிரிட்டு வருகிறார். அதில் ஒன்று காச்சில் கிழங்கு. இந்த கிழங்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அறுவடைக்கு வந்து விடும். அதன்படி அறுவடைக்கு தயாரான காச்சில் கிழங்கு வெட்டி எடுக்கும் பணியில் பிரதீஸ் ஈடுபட்டார். அப்போது, கிழங்கு பூமிக்கு அடியில் ஆழமாக சென்றதை கண்டார். சுமார் 8 அடி ஆழத்தில் பல பிரிவுகளாக சென்றிருந்த கிழங்கு முழுமையாக உடையாமல் பிரதீஸ் அறுவடை செய்தார். அதன் எடை 45 கிலா இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். வழக்கமாக இந்த வகையை சேர்ந்த கிழங்கு ஒன்று அதிகபட்சமாக 20 கிேலா இருக்கும். ஆனால் இந்த கிழங்கு 2 மடங்கு எடையில் உள்ளது. இந்த கிழங்கை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.


Next Story