பிளஸ்-2 தேர்வில்6 அரசு பள்ளிகள் உள்பட 45 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வில்6 அரசு பள்ளிகள் உள்பட 45 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 தேர்வில் 6 அரசு பள்ளிகள் உள்பட 45 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 189 பள்ளிகளில் இருந்து 21,566 மாணவ- மாணவிகள் எழுதினர். இவர்களில் 19,552 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

மாவட்டத்தில் மொத்தம் 45 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. அதில் சிங்கனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, தைலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, இல்லோடு அரசு மேல்நிலைப்பள்ளி, நெகனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வளவனூரில் உள்ள விழுப்புரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளி ஆகிய 6 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

100 சதவீதம் தேர்ச்சி

மேலும் முகையூர் செயின்ட் பீட்டர் பால் சிறப்பு பள்ளி, திண்டிவனம் சோலார் மெட்ரிக் பள்ளி, விழுப்புரம் எஸ்.பி.என். மெட்ரிக் பள்ளி, பாலப்பாடி அசுவத்தமா மெட்ரிக் பள்ளி, அன்னியூர் ஆலிவ் ட்ரீ மெட்ரிக் பள்ளி, பனமலைப்பேட்டை ஓம்சிவ சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, மேல்மலையனூர் கங்கா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, நங்கிலிகொண்டான் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி, திண்டிவனம் தாகூர் மெட்ரிக் பள்ளி, நரசிங்கராயன்பேட்டை ஸ்ரீவித்ய விகாஸ் மெட்ரிக் பள்ளி, கோலியனூர் சிவசக்தி மெட்ரிக் பள்ளி, விழுப்புரம் சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, சத்தியமங்கலம் ராஜாதேசிங்கு வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, மேட்டுக்குப்பம் கிறிஸ்ட் தி கிங் மெட்ரிக் பள்ளி, விழுப்புரம் ஆதித்யாஸ் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, சாரம் செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி, கருவம்பாக்கம் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி, முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, திண்டிவனம் சந்தைமேடு செயின்ட் பிரான்சிஸ் அசிசி மெட்ரிக் பள்ளி, செஞ்சி கலைவாணி மெட்ரிக் பள்ளி, முகையூர் செயின்ட்ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியன 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

39 தனியார் பள்ளிகள்

அதேபோன்று செஞ்சி அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி, பனமலை ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, மரக்காணம் ஜே.எம்.ஜே. மெட்ரிக் பள்ளி, விக்கிரவாண்டி செயின்ட் மேரிஸ் மெட்ரிக் பள்ளி, விழுப்புரம் இ.எஸ். மெட்ரிக் பள்ளி, கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலைப்பள்ளி, மணம்பூண்டி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, செஞ்சி சாணக்யா மெட்ரிக் பள்ளி, விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கணக்கன்குப்பம் லூர்துஅன்னை மேல்நிலைப்பள்ளி, செஞ்சி சாரதா மெட்ரிக் பள்ளி, விழுப்புரம் பூந்தோட்டம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் பள்ளி, திண்டிவனம் மாண்ட்போர்ட் மெட்ரிக் பள்ளி, விழுப்புரம் தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, குயிலாப்பாளையம் மேல்நிலைப்பள்ளி ஆகிய 39 தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.


Next Story