சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு எழுத 4,544 பேர் வரவில்லை
மதுரை மாவட்டத்தில் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு எழுத 4,544 பேர் வரவில்லை.
மதுரை,
நாடு முழுவதும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுகள் நேற்று நடந்தது. மதுரை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத கண்பார்வை மாற்றுத்திறன் கொண்ட 28 பேர் உள்பட 8 ஆயிரத்து 420 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர்.
இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 17 இடங்களில் 21 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 2 அமர்வுகளாக இந்த தேர்வு நடந்தது. காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை நடந்த தேர்வை 3 ஆயிரத்து 911 பேர் எழுதினர். 4 ஆயிரத்து 509 பேர் தேர்வு எழுதவில்லை. பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடந்த தேர்வை 3 ஆயிரத்து 876 பேர் எழுதினர். 4 ஆயிரத்து 544 பேர் தேர்வு எழுத வரவில்லை.
புதூர் சி.எஸ்.ஐ. கல்லூரியில் நடந்த தேர்வை கலெக்டர் அனிஷ் சேகர் ஆய்வு செய்தார். இந்த தேர்வை முன்னிட்டு தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story