46 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
விருதுநகர் அருகே 46 மூடை கடத்தல் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மதுரையை சேர்ந்தவரை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே 46 மூடை கடத்தல் ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மதுரையை சேர்ந்தவரை கைது செய்தனர்.
வாகன சோதனை
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிட்ஜிட் மேரி தலைமையில் இந்நகர் மதுரை ரோட்டில் சத்திர ரெட்டியபட்டி லிலக்கில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த வேனில் தலா 40 கிலோ கொண்ட 46 மூடை ரேஷன் அரிசி இருந்தது. இந்த ரேஷன் அரிசி விருதுநகர் அல்லம்பட்டி பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வேனுடன் 46 மூடை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
ஒருவர் கைது
வேனை ஓட்டி வந்த மதுரை பாண்டிக்கோவிலை சேர்ந்த ரவி (வயது 31) என்பவரிடம் விசாரித்த போது அவர் வேன் மற்றும் ரேஷன் அரிசி உரிமையாளர் என தெரிய வந்தது.
அவர் இந்த ரேஷன் அரிசி மூடைகளை கோழி தீவன ஆலைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து ரவி மீது உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.