46 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
திருத்தங்கல் உணவகங்களில் 46 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகாசி,
திருத்தங்கல் உணவகங்களில் 46 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
கெட்டுப்போன இறைச்சி
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் சில உணவகங்களில் இறைச்சியை பதப்படுத்தி வைத்து சமைத்து தரப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதைதொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜாமுத்து திருத்தங்கல் பகுதியில் உள்ள சில உணவகங்களில் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது சுமார் 46 கிலோ கெட்டுப்போன இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்தியதும் தெரியவந்தது.
ரூ.39 ஆயிரம் அபராதம்
இதனை பறிமுதல் செய்த அதிகாரி ராஜாமுத்து, கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தார்.
இதேபோல் பதனீரில் கலப்படம் செய்து விற்பனை செய்தவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் 7 பேரிடம் தலா ரூ.2 ஆயிரமும், 5 பேரிடம் தலா ரூ.5 ஆயிரமும் அபராதம் என மொத்தம் ரூ.39 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.