ஆவணியாபுரம் தடுப்பணையிலிருந்து 4,600 கனஅடி நீர் வெளியேற்றம்
செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆவணியாபுரம் தடுப்பணையிலிருந்து 4,600 கன அடிநீர் வெளியேளற்றப்படுகிறது. அதன்காரணமாக 45 ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேத்துப்பட்டு
செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆவணியாபுரம் தடுப்பணையிலிருந்து 4,600 கன அடிநீர் வெளியேளற்றப்படுகிறது. அதன்காரணமாக 45 ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தொடர்மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை விட்டு விட்டு மழை பெய்தது. ஜவ்வாதுமலையிலிரு்து தோன்றும் செய்யாறு கலசபாக்கம, ஆரணி அருகே ஆவணியாபுரம் வழியாக செல்கிறது.
ஜவ்வாதுமலை பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக செய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே கலசபாக்கம் பகுதியிலும் ஆவணியாபுரத்திலும் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
தற்போது வெள்ளம் காரணமாக தடுப்பணை நிரம்பி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. இந்த நிலையில் ஆவணியாபுரம் பகுதியில் உள்ள தடுப்பணையிலிருந்து 4 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தடுப்பணையில் 15 கண் மதகுகள் வழியாக தண்ணீர் பாய்ந்து செல்வதை அந்த பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்
ஏரிகள் நிரம்பின
இந்த தண்ணீரால் பெரணமல்லூர், செய்யாறு பகுதிகளில் உள்ள பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஆயிலவாடி, எறும்பூர், மேல் கொளத்தூர், நாயகன்ஏரி, குப்பம் ஏரி, வாரந்தங்கல், இருங்கள், கோவிலூர், நல்லாளம், குருபூண்டி நெமிலி, புரிசை, சித்தாம்பூர் அரசூர், அன்ட்வெட்டி தாங்கள், தேன் சேத்தமங்கலம், காரனை, கீழ்குவளைவேடு. சேத்பட்டு, தெள்ளூர், எச்சூர் பெரிய ஏரி, பெரும்பாலை, வல்லூர் தாங்கல், கொக்காத்தூர், கடுகனூர் கீழ்ப்பந்தல், குழாம்பாடி, தொழுப்பேடு வாழ்கொடை, எறையூர் முருக்கேரி, தவசி, நாவல்கழனிபாக்கம், மேல்மட்டை உள்பட விண்ணமங்கலம், கிழாத்தூர் உளபட 45 ஏரிகள் நிரம்பியுள்ளன.
மேலும் 28 ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் அந்த ஏரிகளும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஏரிகள் நிரம்புவதை செய்யாறு அணைக்கட்டு இளநிலை பொறியாளர் பார்த்திபன் (பாசனம்) மற்றும் அலுவலர்கள் கண்காணித்து வருகின்றன.