பெரம்பலூர் பயணியிடம் ரூ.46.37 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்


பெரம்பலூர் பயணியிடம் ரூ.46.37 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
x

பெரம்பலூர் பயணியிடம் ரூ.46.37 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை, அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவம் தொடர்கதையாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது

இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் பெரம்பலூரை சேர்ந்த வெங்கடேசன் என்ற பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 846 கிராம் எடையுள்ள ரூ.46 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story