மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 470 மனுக்கள் பெறப்பட்டன


மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 470 மனுக்கள் பெறப்பட்டன
x

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 470 மனுக்கள் பெறப்பட்டன

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 470 மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். இதில் கல்வி உதவித் தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச் சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 470 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்பு திட்டம் வெங்கடேசன், மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் அன்பழகன் மற்றும் அனைத்து த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story