அல்லேரி மலையில் 4,700 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
அல்லேரி மலையில் 4,700 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
அல்லேரி மலையில் 4,700 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
வேலூரை அடுத்த அல்லேரி மலையில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதை தடுக்கவும், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சாராய ஊறல்களை அழிக்கவும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் அல்லேரி மலை, மருதவல்லிமேடு கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அல்லேரி மலையில் பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக், இரும்பு பேரல்களில் 4,700 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து தரையில் கொட்டி அழித்தனர்.
மேலும் சாராயம் காய்ச்சுவதற்கு மற்றும் சாராய ஊறலுக்கு பயன்படுத்தப்பட்ட அடுப்புகள், வெல்லம், பிளாஸ்டிக், இரும்பு பேரல்கள், பிளாஸ்டிக் குடம் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.