கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய 48 வீடுகள் இடித்து அகற்றம்


கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய 48 வீடுகள் இடித்து அகற்றம்
x

வாணியம்பாடியில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 48 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

திருப்பத்தூர்

வாணியம்பாடியில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 48 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

கால்வாய் ஆக்கிரமிப்பு

வாணியம்பாடி அரசு மருத்துவமனை அருகே ஏரி கால்வாய் செல்கிறது. இதனை ஆக்கிரமித்து சுமார் 30 ஆண்டுகளாக 48 வீடுகளை கட்டி வாழ்ந்து வந்தனர். இதனால் மழை காலங்களில் மழை நீர் கால்வாயில் செல்ல முடியாமல் அரசு மருத்துவமனை மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.

இதனை அகற்ற பல முறை அதிகாரிகள் முயன்ற போது அந்தப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை கைவிட்டனர். இந்த நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டார்.

48 வீடுகள் அகற்றம்

அதன்பேரில் தாசில்தார் சம்பத், நகராட்சி ஆணையாளர் மாரிசெல்வி உள்ளிட்ட அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஏரி கால்வாயை ஆக்ரமித்து கட்டப்பட்டு இருந்த 48 வீடுகளை அகற்றினர்.

அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நீர் நிலையங்கள், அரசு புறம்போக்கு இடங்கள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்யும்போதே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், ஏழை மக்கள் கட்டிய குடிசைகளில் மற்றும் சிறிய கட்டிடங்களை அப்புறப்படுத்திய மாவட்ட நிர்வாகம், நகரப் பகுதியில் உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story