4900 கிலோ ரேஷன் பறிமுதல்


4900 கிலோ ரேஷன் பறிமுதல்
x

கர்நாடக மாநிலத்துக்கு கடத்தி சென்ற 4900 கிலோ ரேஷன் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக திருவண்ணாமலை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து இன்று காலை அந்த பகுதியில் போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது சின்னகல்லப்பாடி வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற லாரியை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

அதில் 50 கிலோ, 25 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.இதன் மொத்த எடை 4900 கிலோ ஆகும்.

இதையடுத்து போலீசார் லாரியை ஓட்டி வந்த திருப்பத்தூர் பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 43) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் வெறையூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசி வாங்கி அதனை கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


Next Story