அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் 4-வது சோமவார விழா
அய்யர்மலை ரெத்தினகிரீசுவரர் கோவிலில் 4-வது சோமவார விழா நடந்தது.
குளித்தலை அருகே அய்யர்மலையில் பாடல் பெற்ற சிவ தலமான ரெத்தினகிரீசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமைகளில் சோமவார விழா நடைபெறுவது வழக்கம். இந்த சோமவார தினத்தன்று சிவபெருமானை வேண்டி விரதம் இருந்து மலையேறி அவரை தரிசனம் செய்துவந்தால் சகல நண்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு இக்கோவிலில் முதல் சோமவாரம் கடந்த நவம்பர் 21 -ந் தேதி தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று 4-வது சோமவாரவிழா நடைபெற்றது.
இதில் குளித்தலை மற்றும் இப்பகுதியைச் சுற்றியுள்ள திரளான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து மலை உச்சிக்குச்சென்று சுவாமியை வழிபட்டனர். பலர் மலை அடிவாரத்தில் தங்களின் விரதத்தை முடிப்பதற்காக இக்கோவில் பாறைகளில் தாங்கள் கொண்டுவந்த பூ, வாழைப்பழங்கள் உள்பட பல பொருட்களை வைத்து தேங்காய் உடைத்து சூடமேற்றி வழிபட்டனர். இந்தநிலையில் நங்கவரம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் என்ற வாலிபர் உலக நன்மை வேண்டி, தனது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டும் இக்கோவிலில் உள்ள 1,017 படிகளில் உருண்டு ஏறி சுவாமியை வழிபட்டு ெசன்றார்.