கல்லூரி மாணவரை தாக்கிய 5 பேர் கைது


கல்லூரி மாணவரை தாக்கிய 5 பேர் கைது
x

கல்லூரி மாணவரை தாக்கிய 5 பேர் கைது

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

திருவட்டார் அருகே உள்ள முதலார் பகுதியைச் சேர்ந்தவர் கிப்சன் (வயது 19). இவர் நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கிப்சன் கடந்த 16-ந் தேதி கல்லூரி முடிந்து வீட்டிற்கு தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கிப்சன் மற்றும் அவருடைய நண்பர்களை வழிமறித்து தாக்கினர். இதில் கிப்சன் பலத்த காயமடைந்தார். அவரை நண்பர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் நாகர்கோவில் ராமன்புதூரை சோ்ந்த மகேஷ் (20) உள்பட 5 பேர் மீது நேசமணி நகர் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மகேஷ் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story