ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது
x

ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட குடிமை பொருட்கள் குற்ற புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் போலீசார் நேற்று உவரி -திசையன்விளை ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். அப்போது கேரள மாநில பதிவு எண் கொண்ட ஒரு காரில் 16 மூட்டைகளில் 640 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கேரள மாநிலம் பாறசாலை மேலகோணம் பகுதியை சேர்ந்த சரத் (வயது 27) மற்றும் அதே பகுதி முள்ளுகாரகாடு சந்தோஷ்குமார் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிசி, கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக உவரி நேதாஜி தெரு வினோலி என்பவரை தேடி வருகின்றனர்.

இதுதவிர உவரி -கூடங்குளம் ரோட்டில் வாகன சோதனை நடத்திய போது கேரளாவுக்கு லாரியில் கடத்தி சென்ற ரேஷன் அரிசி பிடிபட்டது. இது தொடர்பாக மேலகோணத்தை சேர்ந்த ஹரிபிரசாத் (27) கன்னியாகுமரி மேலபுத்தன்வீடு பகுதியைச் சேர்ந்த அருண் (39) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 33 மூட்டைகளில் 1,320 கிலோ ரேஷன் அரிசி மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் தென்காசி குடிமைபொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தென்காசி புதிய பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு மொபட்டில் 3 மூட்டைகளில் 120 கிலோ ரேஷன் அரிசி கடத்திச்சென்ற கணக்கப்பிள்ளை வலசையை சேர்ந்த சண்முகவேலு (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story