கஞ்சா, சாராயம் பதுக்கி வைத்திருந்த 5 போ் கைது


கஞ்சா, சாராயம் பதுக்கி வைத்திருந்த 5 போ் கைது
x

திருவண்ணாமலையில் கஞ்சா, சாராயம் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்பேரில் டவுன் துணை போலீஸ் குணசேகரன் தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அண்ணாநகர், மாாியம்மன் கோவில் தெரு, சமுத்திரம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகப்படும் நபர்களின் வீடுகளில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா மற்றும் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக திருவண்ணாமலை அண்ணாநகர் 9-வது தெருவை சேர்ந்த உலகநாதன் (வயது 48), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆஷா (40), ஜான்சி (48), சமுத்தரம் காலனியை சேர்ந்த மங்கை (42), அஜீஸ்காலனியை சேர்ந்த உதயகுமார் (35) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ 600 கிராம் கஞ்சா மற்றும் 145 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர். மேலும் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story