தகுதி சான்று இல்லாத 5 ஆட்டோக்கள் பறிமுதல்


தகுதி சான்று இல்லாத 5 ஆட்டோக்கள் பறிமுதல்
x

திண்டுக்கல்லில், தகுதிச்சான்று இல்லாத 5 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தகுதி சான்று இல்லாமல் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து கலெக்டர் பூங்கொடி உத்தரவின்பேரில் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் திண்டுக்கல்லில் தாடிக்கொம்பு சாலை, பழனி சாலை ஆகிய பகுதிகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 5 ஆட்டோக்கள் சிக்கின. இதைத் தொடர்ந்து அந்த ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விதியை மீறி ஆட்டோவின் மேல்பகுதியை அகற்றிவிட்டு என்ஜின் உள்ளிட்ட கீழ்பகுதியை தட்டுவண்டியாக மாற்றி இயக்கப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வாகனங்கள் அனைத்தும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட இருக்கிறது. இதேபோல் மாவட்டம் முழுவதும் தகுதி சான்று இல்லாத ஆட்டோக்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.


Next Story