மின்சாரம் தாக்கி 5 மாடுகள் சாவு


மின்சாரம் தாக்கி 5 மாடுகள் சாவு
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செம்பனார்கோவில் அருகே மின்சாரம் தாக்கி 5 மாடுகள் உயிரிழந்தன.

மயிலாடுதுறை

பொறையாறு:

செம்பனார்கோவில் அருகே மின்சாரம் தாக்கி 5 மாடுகள் உயிரிழந்தன.

மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடுகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் முருகன் (வயது36). இவர் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் கிடை அமைத்து மாடு மற்றும் ஆடுகளை பராமரித்து அறுவடை செய்த வயலில் மேய்த்து வருகிறார். இவரிடம் 3 எருமை மாடுகள், 8 பசுகள் என மொத்தம் 11 மாடுகளும், 200 ஆடுகளும் இருந்தன. நேற்று மாலை செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் செந்தில்முருகன் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார்.

மின்சாரம் தாக்கி சாவு

அப்போது வயலில் மின்சார போஸ்டில் இருந்து ஆழ்துளை கிணற்றுக்கு செல்லும் மின்கம்பி அறுந்து கிடந்தது. இந்த மின்கம்பியைு அங்கு மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த மாடுகளி எதிர்பாராத விதமாக மிதிததன. இதில் மின்சாரம் தாக்கி ஒரு எருமை மாடு மற்றும் 4 பசு மாடுகள் வயலிலேயே உயிரிழந்தன. இது குறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் கால்நடை துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி ஒரே நேரத்தில் 5 மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story