மின்சார கம்பி அறுந்து விழுந்து கன்று குட்டி உள்பட 5 மாடுகள் பலி
கடையத்தில் மின்சார கம்பி அறுந்து விழுந்து கன்று குட்டி உள்பட 5 மாடுகள் பலியானது.
கடையம்:
கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பலத்த சூறைக்காற்று வீசி வருவதால், வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்படுதல், மின் கம்பங்கள் சாய்தல் உள்ளிட்ட சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடையத்தை சேர்ந்த விவசாயிகளான மாரியப்பன், முத்து ஆகியோர் தாங்கள் வளர்க்கும் எருமை மாடுகளை நேற்று மாலை கடையம் ரோஜா நகர் எதிர்புறம் உள்ள வயல்வெளியில் வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர்.
அப்போது அருகில் அடர்ந்த கருவேலமரத்திற்கு இடையே இருந்த மின்சார கம்பி பலத்த காற்றின் காரணமாக அறுந்து விழுந்தது. இதில் அங்கு மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடுகளின் மேல் மின்கம்பி விழுந்ததும், ஒரு கன்றுக்குட்டி மற்றும் 5 எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது. தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.