சென்னை டிபிஐ வளாகத்தில் 5-நாட்களாக நீடித்த ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்
பணி நியமன தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 5-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிநியமன தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அரசாணை ரத்து செய்யப்படும் என்ற தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்றக்கோரியும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் கடந்த 9-ந்தேதியில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
5-வது நாளாக இன்று அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைச்சர் பொன்முடி இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதல் அமைச்சருடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.