5 பட்டாசு கடைகளுக்கு அபராதம்


5 பட்டாசு கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்ட 5 பட்டாசு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டாசு கடைகளில் விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொள்ளும்படி திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் உத்தரவிட்டார். இதையடுத்து திண்டுக்கல் இணை ஆணையர் கோவிந்தன் அறிவுரையின்படி உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவசிந்து தலைமையில் உதவி ஆய்வாளர்களை கொண்ட குழுவினர் திண்டுக்கல், பழனி, நிலக்கோட்டை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் 25 பட்டாசு கடைகளில் ஆய்வு செய்தனர்.


அப்போது சட்டமுறை எடையளவுகள் சட்டம் 2009 மற்றும் பொட்டல பொருட்கள் விதி 2011-ன் கீழ் பட்டாசு கடைகள் செயல்படுகிறதா? என்று சரிபார்த்தனர். அதில் 5 கடைகள் விதிகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 5 பட்டாசு கடைகளுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் இதேபோல் விதிகளை மீறி செயல்படும் பட்டாசு கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.





Next Story