வெறிநாய் கடித்து 5 ஆடுகள் சாவு
வெறிநாய் கடித்து 5 ஆடுகள் சாவு
சென்னிமலை
சென்னிமலை அருகே உள்ள பனியம்பள்ளியை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயியான இவர் 7 வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். தினமும் இந்த ஆடுகளை மேய்த்து விட்டு தனது தோட்டத்தில் அமைத்துள்ள கம்பி வேலிக்குள் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விடுவார். அதேபோல் நேற்று முன்தினம் மாலையில் ஆடுகளை மேய்த்து விட்டு வழக்கம்போல் கம்பி வேலிக்குள் அடைத்து விட்டு திருமணத்துக்காக சென்று விட்டார்.
பின்னர் நேற்று மதியம் 2 மணி அளவில் ஆடுகள் அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு 7 ஆடுகளில் 5 ஆடுகள் இறந்தும், மற்ற 2 ஆடுகள் உயிருக்கு போராடி கொண்டு இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வெறி நாய் கடித்து நாய்கள் இறந்தது தெரியவந்தது.
அதேபோல் பனியம்பள்ளி அருகே உள்ள துலுக்கம்பாளையம் பெரிய தோட்டத்தை சேர்ந்த விவசாயி கருப்புசாமி என்பவரின் 3 ஆடுகளையும் நாய் கடித்துள்ளது. இதில் அந்த ஆடுகள் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறது. சென்னிமலை அருகே வெறிநாய் கடித்து 5 ஆடுகள் இறந்த சம்பவம் அந்த பகுதி விவசாயிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.