மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் இறந்தன


மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் இறந்தன
x

மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் இறந்தன.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள செங்குணம் கிராமம் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் தர்மன். இவரது மனைவி பூங்கா (வயது 48). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தற்போது 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஆடுகள் நீண்ட நேரமாக கத்திக்கொண்டே இருந்ததை அடுத்து பட்டிக்கு சென்றார். அப்போது முத்தையா, திருமூர்த்தி ஆகியோர் சந்தேகத்தின் பேரில் லைட்டுடன் சென்று பார்த்த போது பட்டிக்கு வெளியே 2 ஆடு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பூங்கா ஆட்டு பட்டிக்கு உள்ளே வந்து பார்த்தபோது 3 ஆடுகளையும் என மொத்தம் 5 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறி இறந்துவிட்டது. இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் செங்குணம் அண்ணா நகர் பகுதியில் ஆடு, மாடு வளர்ப்போர் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அந்த ஆடுகளை வெறி நாய் கடித்திருக்கலாம் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story