அந்தியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி


அந்தியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி
x

அந்தியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலியாகின.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலியாகின.

5 ஆடுகள் பலி

அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி பொதியா மூப்பனூர் தம்பிக்கலையன் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் மகேஷ், ராமசாமி, மணியன், ஆனந்தகுமார், வேலு. அனைவரும் கூலித்தொழிலாளர்கள். இவர்கள் பட்டி அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார்கள். பகலில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடும் இவர்கள், இரவில் பட்டியில் அடைத்து விடுவார்கள்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு பட்டியில் ஆடுகளை அடைத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு ஒன்று மகேசின் 2 ஆடுகள், ராமசாமியின் 2 ஆடுகள், மணியனின் 1 ஆடு என மொத்தம் 5 ஆடுகளை கடித்து கொன்றுவிட்டது.

கோரிக்கை

இதுபோன்று கடந்த 15 நாட்களில் மட்டும் மர்ம விலங்குகள் கடித்து கொன்றதில் 17 ஆடுகள் இறந்து உள்ளன. ஆனால் இதுவரை மர்ம விலங்குகளை வனத்துறையினர் பிடிக்கவில்லை.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், 'மர்ம விலங்குகள் கடித்து 17 ஆடுகள் இறந்துவிட்டன. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே ஆடுகளை கொல்லும் மர்ம விலங்குகளை தானியங்கி கேமரா அமைத்து, அதன் நடமாட்டத்தை கண்காணித்து பிடிக்க வேண்டும்,' என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story