அதிக பாரம் ஏற்றிய 5 கனரக வாகனங்கள் பறிமுதல்
அதிக பாரம் ஏற்றிய 5 கனரக வாகனங்கள் பறிமுதல்
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறி விபத்தை ஏற்படுத்தும் வகையில் கனரக வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே விபத்துகளை தடுக்கும் விதமாக அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நாகர்கோவில் மாநகரில் நேற்று நடைபெற்ற வாகன சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த 5 கனரக வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட 5 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story