மோட்டார் சைக்கிள் மொபட் மோதல் 5 பேர் படுகாயம்
செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மொபட் மோதல் 5 பேர் படுகாயம்
செஞ்சி
செஞ்சியை அடுத்த கவரை கடகம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவர் தனது உறவினர் வேலுவின் குழந்தைகள் நேதாஜி(14), சகுந்தலாதேவி(12) ஆகியோருடன் மொபட்டில் அப்பம்பட்டில் இருந்து கவரை நோக்கி சென்று கொண்டிருந்தார். கவரை அருகே வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த குப்புசாமி, நேதாஜி, சகுந்தலாதேவி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சென்னை பாடியை சேர்ந்த முருகேசன் மகன் பாலு(17), செல்வம் மகன் சத்தியசீலன்(16) ஆகிய 5 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு குப்புசாமி புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.